வாடிப்பட்டியில்
ஓ பி ஆர் பிறந்தநாள் விழா
வாடிப்பட்டி, பிப்.3-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரெட்டி நல சங்கம் சார்பாக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 13O வது பிறந்தநாள் விழா பஸ் நிலையம் கொண்டாடப் பட்டது, இந்த விழாவிற்கு சங்கம் தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர் கள் குணசேகரன்,கோவிந்தராஜ், விஜயன், பேராசிரியர் சீதாராமன் சாமி ரங்கப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராஜாங்கம் மாயாதரன் வரவேற்றார். இவ்விழாவில் பேரூராட்சி துணை தலைவர் கார்த்திக், தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், அ.தி.மு.க பேரூர் செயலாளர் அசோக்குமார், பாசறை மாவட்டத் துணைச் செயலாளர் மணிமாறன், வார்டு செயலாளர் திருப்பதி, தே.மு.தி.க மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன், மாவட்டத் துணை செயலாளர் டாக்டர் பொன்யாழினி, பேரூர் செயலாளர் பாலாஜி, பிஜேபி வழக்கறிஞர் அணி மாவட்ட துணை தலைவர்கார்த்திக்,மண்டல் தலைவர் சேதுராமன், துணைத் தலைவர் கார்த்திக் செல்வம், காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் வக்கீல் செல்வகுமார், முக்குலத்தோர் நல சங்க பொதுச்செயலாளர் ஆதி முத்துக்குமார், தலைவர் சார்லஸ் ரங்கசாமி , ஒன்றிய செயலாளர் கோட்டூர் சாமி,வி.சி.க ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன், கம்யூனிஸ்ட் கட்சி செல்வராஜ், தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் மகேந்திரன்,மூ.மு.க.மாவட்ட செயலாளர் செந்தில்பாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை மாயகிருஷ்ணன் இளமதி, சுஜித் விநாயகம் விஜயகுமார் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ரோஹித் நன்றி கூறினார்.
வாடிப்பட்டியில் ஓ பி ஆர் பிறந்தநாள் விழா

Leave a Reply