வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கியாகும். கேரள மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ள இந்த வங்கிக்கு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலையிலும் ஒரு கிளை உள்ளது. சூரல்மலை கிளையில் கடன்பெற்று, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே கேரள வங்கி, முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியதுடன் வங்கியின் ஊழியர்கள் தங்களின் 5 நாள் சம்பளத்தை முதல்வரின் பேரிடர் நிதிக்கு வழங்கியுள்ளனர்.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி……. – கேரளா வங்கி அறிவிப்பு

Leave a Reply