, ,

வத்தலகுண்டு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு…..!

Rotary club
Spread the love

திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அஸ்மா மஹாலில் நடைபெற்றது. இதில் , டாக்டர். யூசுப் மௌலானா தலைவராகவும் , பேராசிரியர் மகேந்திர பாண்டியன் செயலாளராகவும், ஆடிட்டர் விஜயன் பொருளாளராகவும் பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு, ரோட்டரி சங்க மூத்த நிர்வாகிகள் மீனா சுப்பையா, ரங்கநாதன் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்துவைத்து வாழ்த்தினர். மேலும் , 13 புதிய உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்து, ரோட்டரி சங்கத்தின் பெருமைகள், சேவைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.இதில் , ஒருங்கிணைப்பாளர் பவஞ்சி பட்டேல், துணை ஆளுநர் மாதவன், முன்னாள் தலைவர் பொன் ரகுநந்தன் மற்றும் பல்வேறு ஊர்களைப் சேர்ந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.