,

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைவு

commercial gas cylinder
Spread the love

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை  இன்று முதல்   குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.  அதன்படி ஒவ்வொரு மாதமும் சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.  தற்போது எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது.

இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.30.50 விலை குறைந்து ரூ.1,930 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது.  ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.