வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிய திமுக பிரமுகர்

Spread the love

கோவை மாநகராட்சி வடவள்ளி 36 வது வார்டில் ஏழை – எளியோருக்கான சிகிச்சையளிக்க அரசு நகர்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை திமுகவை சேர்ந்த பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷியாம் சுந்தர் வீடாக மாற்றி குடியேறியுள்ளார். இங்கு, தனது மனைவி கனிகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது சொந்த வீடாக மாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, நேரடியாக களத்திற்கு சென்று பார்த்ததில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குழந்தைகளின் துணிகள், மற்றும் அவரது மனைவியின் துணிகள் கயறுகட்டி காயவைக்கப்பட்டு இருந்தது. ஷியாம் சுந்தரின் மனைவி கனிகா இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இங்கு வாரம் ஒருமுறை மட்டும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அதனால் இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படவில்லை, நாங்கள்தான் குடும்பத்துடன் வசித்துவருகிறோம் என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *