வங்கதேச மாணவர் தலைவர் கொலை; பின்னணியில் இந்தியாவா?

Spread the love
பாகிஸ்தானில் இருந்து 1971ம் நடந்த போரின் போது, கிழக்கு பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு வங்கதேசம் என்ற தனிநாடு உருவானது. இந்தியா நடத்திய போரின் விளையாகத்தான் வங்கதேசம் என்ற நாடே உருவானது. அப்போதிருந்தே, வங்கதேசம் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதாக பரவலாக அந்த நாட்டு மக்கள் கருதுவது உண்டு. குறிப்பாக, ஷேக் ஹசினா இந்தியாவுடன் மிகுந்த நெருக்கம் காட்டி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தங்களுக்கு முன்பு, மாணவர்கள் நடத்திய புரட்சியின் விளைவாக ஷேக் ஹசினாவின் ஆட்சி வங்கேதசத்தில் இருந்து அகற்றப்பட்டது. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேச அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது, மாணவர்கள் அடக்குமுறைக்குள்ளானார்கள். ஏராளமானோர் பலியானார்கள். இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசினா மற்றும் வங்கதேச முன்னாள் உள்துறை அமைச்சரான அசாதுன்ஷா கானுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரும், இந்தியாவில்தான் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள், இருவரையும் வங்கதேசத்தின் தற்போதைய அரசிடம் இந்தியா ஒப்படைக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக சமீப காலத்தில்  வங்கதேச்த்தில் இந்திய எதிர்ப்பு புரையோடி போய் இருந்தது. இந்த நிலையில், வங்கக்கடலில் இனி நாங்கள்தான் ராஜா என்கிற ரீதியாக வங்கதேச தற்போதைய வங்கதேச பிரதமர் முகமது யூனுஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். இதன் எதிரொலியாக, மேற்கு வங்கத்தில் இருந்து சர்வதேச எல்லை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களை வங்கதேச கடற்படையினர் மிரட்ட தொடங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 15ம் தேதி காலை 6 மணியளவில் இந்திய கடல் எல்லைக்குள் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மேற்கு வங்க மீனவர்களின் படகு மீது  வங்கதேச கடற்படையின் படகு ஒன்று மோதி கவிழ்த்துள்ளது. இதில், இந்திய  மீனவர்கள் அனைவரும் கடலில் விழுந்தனர். இந்த சம்பவத்தில் 11 மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படை மீட்டது. 5 பேர் நிலை என்னவென்று தெரியவில்லை. இப்படி, இந்திய எதிர்ப்பு மனநிலையை வங்கதேச அரசு வெளிப்படையாகவே வெளிக்காட்ட தொடங்கியுள்ளது. அதோடு, பாகிஸ்தானுடனும் வங்கதேசசம் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது.  1971ம் ஆண்டு போருக்கு பிறகு, பாகிஸ்தான் கடற்படை தளபதி முதல்முறையாக வங்கதேசத்துக்கு 3 நாட்கள் விசிட் அடித்தார். அப்போது, வங்கக்கடலில் இந்தியாவின் செல்வாக்கை குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக போரட்டம் வெடிக்க தொடங்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன?

வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சிக்கு எதிராக போராடிய மாணவ தலைவர்களில் முக்கியமானவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி. இவர், வங்க தேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவை அப்புறப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர். அதோடு, ஷேக் ஹசீனாவின் அவாமிலீக் கட்சியையும் தடை செய்ய வேண்டுமென்பது இவரின் லட்சியமாக இருந்தது. இவரின், கோரிக்கையை ஏற்று தற்போதைய வங்கதேச பிரதமர் யூனுஸ் அவாமி லீக் கட்சி வரும் தேர்தலில் போட்டியிட தடைவிதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், உஸ்மான் ஹாடி  இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்டவர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள வங்கதேச தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹாடி அறிவித்திருந்தார்.இந்த நிலையில், வங்கதேச தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ம் தேதி அந்த நாட்டின் 13வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது. இதையடுத்து, விரைவில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே மத்திய டாக்காவில் பினோய்நகர் பகுதியில் வைத்து சுடப்பட்டார் . மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை சுட்டுவிட்டு தப்பியதாக டாகா போலீஸ் கூறுகிறது. இதில், படுகாயமடைந்த ஹாடி உடனடியாக, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, சிங்கப்பூர் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ம் தேதி இரவு இறந்து போனார். 32 வயதேயான இளம் தலைவர் இறந்தது வங்கதேசத்தை கொந்தளிக்க வைத்தது. குறிப்பாக, தலைநகர் கொழுந்து விட்டு எரிகிறது. டாக்காடிவில் பல கட்டடங்கள், குடியிருப்புகள் தாக்கப்பட்டன.  வங்கதேசத்தின் முன்னணி பத்திரிகைகளான டெய்லி ஸ்டார் மற்றும் புரோமல் ஆலோ ஆகியவற்றின்  அலுவலகங்கள் தாக்கப்பட்டன. உள்ளே, பணியாற்றிக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள்.

இதற்கிடையே, வன்முறையாளர்கள் இந்தியாவின் தூண்டுதலின் பேரில், ஹாடி கொலை செய்யப்பட்டதாக  குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்தியா குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையென்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர். அதோடு, குற்றவாளிகளை ஒப்படைக்கும் வரை, டாக்காவிலுள்ள இந்திய தூதரகம் செயல்பட முடியாது, இப்போது மட்டுமல்ல எப்போதுமே செயல்பட முடியாது என்று அறிவித்துள்ளனர். இந்திய தூதரகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இதனால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லாவாற்றுக்கும் உச்சக்கட்டமாக வங்கதேசத்தின் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ஹசாந்த் அப்துல்லா வேறு விதமாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக செயல்பட்டால் இந்தியாவின் 7 சகோதரி மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகலாயா, திரிபுரா, மிசோரம், நாகலாந்து மாநிலங்களை இந்தியாவிடம் இருந்து துண்டிப்போம் என்று எச்சரித்துள்ளார்.