வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, ‘மோன்தா’ என்ற பெயரில் புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது சென்னைக்கு கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது.
வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயல், நாளை (அக்டோபர் 28) காலை தீவிரப்புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் கடலோரங்களுக்கு இடையே, காக்கிநாடா அருகே நாளை மாலை முதல் இரவு நேரத்தில் நிலப்பரப்பைக் கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
புயல் நிலப்பரப்பைக் கடக்கும் போது, காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை, இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்துடன் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் வடதமிழகத்தில் சில இடங்களில், தென்தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைச் சேர்த்த திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதிகளில் வசிப்பவர்கள், மீனவர்கள் அதிகெச்சரிக்கையுடன் இருக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் வானிலை துறை கேட்டுக்கொண்டுள்ளது.



Leave a Reply