லயன்ஸ் 3242 C மாவட்ட LBN சார்பில் இரு நாள் தொழில் பயிற்சி வகுப்பு

Spread the love

கோவை லயன்ஸ் 3242 C மாவட்ட லயன்ஸ் தொழில் வலை அமைப்பு (LBN) சார்பில், “Executive Mastery Program in Business Automation (EMBA)” என்ற தலைப்பில் இரு நாள் தொடர் தொழில் பயிற்சி வகுப்பு, கோவை அருகிலுள்ள தனியார் ரிசார்ட்டில் சிறப்பாக நடைபெற்றது. பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற IBTC (International Board of Trainers and Coaches) அமைப்பைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் இந்த பயிற்சியை வழங்கினர்.
இந்த பயிற்சி நிகழ்வை மாவட்ட ஆளுநர் PMJF. A. ராஜசேகர், துணை ஆளுநர்கள் PMJF. P. S. செல்வராஜ், PMJF. சூரி நந்தகோபால், மாவட்ட செயலாளர் லயன். ராஜா சுந்தரம், பொருளாளர் லயன். நல்லபாண்டி (வழக்கறிஞர்), மாவட்ட சேவை பிரிவு தலைவர் PMJF. எஸ். செந்தில் குமார், LBN மாவட்ட தலைவர் லயன். எம். எம். பிரபு உள்ளிட்டோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
மேலும் LBN கோவை கிளையின் பட்டயத் தலைவர் லயன். முனைவர் வைப்ரேசன் வீரா, துணைத் தலைவர் லயன். எம். வி. பிரபு, லயன். ஜான் பிரிட்டோ மற்றும் லயன். சந்திர பிரபா, லயன். சண்முகசுந்தரம், லயன். சந்திரசேகர், லயன். ஸ்டீவ் புஷ்பராஜ், லயன். ஆஸ்பயர் ஆண்டணி உள்ளிட்ட பல முக்கிய மாவட்ட நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் நீடித்த இந்த தொழில் பயிற்சியில் 35-க்கும் மேற்பட்ட லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் பங்கேற்று, வணிக தானியங்கி முறைகள், நிர்வாக திறன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி பெற்றனர். பயிற்சி முடிவில், IBTC சார்பில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயல் செயலாளர், தேஜஸ் ரியல் எஸ்டேட் அண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளரான லயன்ஸ் செந்தில் குமாருக்கு, EMBA தொழில் பயிற்சி சான்றிதழை மாவட்ட தலைவர் லயன். எம். எம். பிரபு மற்றும் பயிற்சியாளர்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் பயிற்சியாளர்களாக திருமதி. சிந்தியா தம்பித்துரை, முனைவர். ராபர்ட் லாரன்ஸ், ஆடிட்டர் குமரேஷ் பாபு, நிதி ஆலோசகர் V. P. சௌந்தரராஜ், முனைவர். சிந்தியா பெனடிக்ட், மருத்துவர் சித்திரா பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மொத்தம் 28 மணி நேரம் தொடர்ந்து பயிற்சிகளை வழங்கினர்.