கோவையில் மனிதர்களை தொடர்ந்து தாக்கி வரும் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த முத்து, நரசிம்மன், கபில்தேவ் ஆகிய கும்கி யானைகளின் முகாமை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு யானைகளுக்கு உணவுகள் வழங்கி மகிழ்ந்தார்.
கோவை தொண்டாமுத்தூர் மற்றும் மேற்கு மலை தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக ஊருக்குள் வரும் ரோலக்ஸ் என்ற காட்டுயானை இதுவரை 8 க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.இதில் பலரும் உயிரிழந்துள்ளனர்.. இது குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகாரளித்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து முத்து, நரசிம்மன், மற்றும் கபில்தேவ் என்ற கும்கி யானைகளை வரவழைத்து பிடிக்க முயன்ற நிலையில் கால்நடை மருத்துவர் விஜயராகவனையும் தாக்கியது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் விஜயராகவனையும் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்த்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வடவள்ளி அருகே பொம்மனாம்பாளையம் பகுதியை சேர்ந்த மருதாச்சலம் என்ற செந்தில் என்பவரை யானை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை தாளியூர் பகுதியில் கும்கி யானைகளின் முகாமிற்கு சென்று யானைகளுக்கு உணவுகள் கொடுத்து மகிழ்ந்தார். மேலும் பணியில் இருந்த வன அலுவலர்களிடம் ரோலக்ஸ் யானையை பிடிக்க நடந்துவரும் பணிகள் குறித்து கேட்டறிந்து. விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
ரோலக்ஸ் யானை பிடிக்கும் கும்கி யானைகளை நேரில் பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி



Leave a Reply