, ,

ரேஷன் கடைகளில் கருவிழிப் பதிவு மூலம் பொருள்கள் விநியோகம் – கோவைக்கு முதல்கட்டமாக 75 கருவிகள்

ration shop
Spread the love

ரேஷன் கடைகளில் கருவிழிப் பதிவு மூலம் பொருள்கள் விநியோகம் செய்ய கோவை மாவட்
டத்துக்கு முதல்கட்டமாக 75 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,401 ரேஷன் கடைகள் உள்ளன.

இந்த கடைகள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகின்றன. தற் போது ரேஷன் கடைகளில் இயந்திரம் மூலம் கைரேகைப் பதிவு செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கண் கருவிழியைப் பதிவு செய்து அதன் மூலம் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.