நடிகர் சூர்யா, வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பிரபலமானவர். அவருடைய 44-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘ரெட்ரோ’, தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்திற்கே தனி சுவையைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ‘ரெட்ரோ’ படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரெட்ரோ படம் பெரிய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்!” எனப் பதிவு செய்துள்ளார்.
அனிருத் தற்போது ‘கிங்டம்’ எனும் படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Leave a Reply