தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகி, பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள் என்று விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். வி.சி.க தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந் தார். அரசியல் காரணங் களால் அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தை பிரமுகர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “காலச் சூழல் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், அவரது மன சாட்சி இங்குதான் உள்ளது. ஒரு பட்டிய லினத்தவர் முதல்வராக வரவேண்டும் எனும் போது அதற்காக முதல் குரலாக விஜய்யின் குரல்தான் ஒலித்தது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உரக்க சொல்வோம். 2 ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் தொழிலை விட்டுவிட்டு விஜய் வந்துள்ளார்.
ஒரே நிறுவனத்தால் எப்படி மொத்த திரையுல கையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிகி றது. தமிழகத்தின் ஊழலையும், மதவாதத் தையும் விஜய் எடுத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வேங்கை வயல் பிரச்சினை இன்றைக்கு வரை தீர்க்க முடியாததற்கு காரணம் என்ன? ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டால் தப்பு என்கிறார்கள்.இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள். 2026-ஆம் ஆண்டில் மன்னராட்சி முழுமையாக ஒழிக்கப்படும் என்று பேசினார்.
தொடர்ந்து, ‘எல்லோ ருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். முதல் புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டெ பெற்றுக்கொண்டார்.
ரூ.2 ஆயிரம் கோடி தொழிலை விட்டுட்டார் : ‘அண்ணல்’ விழாவில் ‘தளபதி ‘ முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

Leave a Reply