ரூ.10 லட்சம் ரூபாய்க்கும் மேல் விலை கொண்ட பொருட்கள் வாங்கும் போது 1% டி.சி.எஸ்.: மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

Spread the love

ரூ.10 லட்சத்தை மேல் விலையுடைய ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் போது, 1 சதவீதம் ‘டாக்ஸ் கலெக்டட் அட் சோஸ்’ (TCS) வசூலிக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
“ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட விலை கொண்ட கைப்பை, கைக் கடிகாரம், காலணி, கலைப் பொருட்கள், ஹோம் தியேட்டர், நாணயங்கள், விளையாட்டு உடைகள் மற்றும் உபகரணங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் போது 1% TCS விற்பனையின்போதே வசூலிக்கப்பட வேண்டும்.

இந்த வரி தொகையை விற்பனையாளர், வாங்குபவரிடமிருந்து வசூலித்து, அவர்களின் பான் எண்ணை குறிப்பிட்டு வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலையுள்ள பொருட்கள் பெரும்பாலும் ரொக்கமாக வாங்கப்படும் காரணத்தால், வருமான வரித்துறை கண்காணிக்க முடியாத நிலை உருவாகிறது. இதன் விளைவாக அரசு வருவாய் இழப்பை சந்திக்க வேண்டியதாகிறது.

இந்த சூழலில், விற்பனையின் போதே TCS வசூலிக்கப்படும் முறையை நடைமுறையில் கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதியாண்டு பட்ஜெட்டில் இதற்கான முன்மொழிவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.