உலக இருதய தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை, நீலாம்பூர் மற்றும் சிட்டி யூனிட், காந்திபுரத்தில் மாபெரும் கட்டணமில்லா இருதய மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 3,000 மதிப்புள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு , ஈ சி ஜி, எக்கோ ஸ்கேன் பரிசோதனைகள், இருதய நிபுணர்கள் மருத்துவ ஆலோசனை, உணவு ஆலோசகர் ஆலோசனை, யோகா பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கப்பட்டது. ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க மாதேஸ்வரன் கூறும் பொழுது “ஒவ்வொரு மருத்துவ பிரிவின் சிறப்பு தினங்களிலும் பொது மக்கள் பயன்பெறும் வகையில் உடல் நலனின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், பயிற்சி கூடங்கள், கருத்தரங்கங்கள் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து ராயல் கேர் மருத்துவமனை நடத்தி வருகிறது. அதன் வகையில் உலக இருதய தினத்தன்று இருதய மருத்துவ ஆலோசனை முகாமில் கட்டணமில்லாமல் இருதய நிபுணர்கள் ஆலோசனையுடன் கூடிய பரிசோதனைகள் அளிக்கப்பட்டது,” என்று கூறினார்.
ராயல் கேர் மருத்துவமனையில் இதயம் காப்போம் மருத்துவ ஆலோசனை முகாம்

Leave a Reply