, , ,

ராயல்கேர் மருத்துவமனையில் தசைக்கூட்டு கதிரியக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி கருத்தரங்கம்

royal care hospital
Spread the love

ராயல்கேர்  மருத்துவமனை மஸ்குலோ ஸ்கெலிட்டல் அல்ட்ராசவுண்ட் சொசைட்டியுடன் இணைந்து சமீபத்தில்  ராயல்கேர் மருத்துவமனை வளாகத்தில் ஏங்கில் ஹாண்ட்ஸ் ஆன் எனும் கணுக்கால் தொடர்பான பயிற்சி கருத்தரங்கத்தை நடத்தியது.

டாக்டர் பிபின் ஷா மற்றும் டாக்டர் ராஜஸ் சௌபால் ஆகியோர் தலைமையில், சேலம், திருப்பூர், பாலக்காடு மற்றும் கோவை  ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 20 பயிற்சி மற்றும் இளைய கதிரியக்க மருத்துவர்கள்  இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.  காலை அமர்வில்: சாதாரண, சோனோ உடற்கூறியல், கணுக்கால் காயங்கள், நோயியல் பற்றிய நேரடி விளக்கக்காட்சி நடைபெற்றது. மதியம் அமர்வில் மூன்று மணிநேரம் தனிப்பட்ட பயிற்சிகள் பற்றிய பிரத்யேக விரிவுரைகள் நடந்தன.

ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.க .மாதேஸ்வரன் கூறும் போது ” தசைக்கூட்டு கதிரியக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இனி வரும் மாதங்களில் இளைய கதிரியக்க வல்லுனர்களின் நலனுக்காக இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.  இந்நிகழ்ச்சியை ராயல்கேர் மருத்துவமனையின் கதிரியக்க மருத்துவர்  டாக்டர் ந. செந்தில்குமார் ஏற்பாடு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *