கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆடைகள் அழகும் கம்பீரமும் இழையோடும் அற்புத கலவையாகும். பால் போன்ற வெண்மையான மென்மையான ராம்ராஜ் காட்டனின் வேட்டியையும் சட்டையையும் அணிந்து பார்ப்பதே தனி அழகு, ஆனந்தம். தரத்தில் எப்போதும் முதலிடத்தில் இருக்கும் ராம்ராஜ் காட்டன் தயாரிப்புகள், அந்தஸ்து, செல்வாக்கு, மரியாதையை சமூகத்தில் அளிக்கவல்லவை.
வேட்டி, சர்ட்டுகளுக்கான பிராண்டில் India’s Most Trusted Brand மற்றும் India’s Most Attractive Dhoti Brand ல் இடம் பெற்றுள்ளது.
தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம், தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காய் www.ramrajcotton.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தங்களது அடுத்த பெருமைமிகு புதிய ஷோரூமை மார்ச் மாதம் 14 ஆம் தேதி, 3/1 பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரில், சேலம் மெயின் ரோடு, தருமபுரி 636701 என்ற முகவரியில் துவங்கி உள்ளது.
D.N.C. மணிவண்ணன் தாளாளர், D.N.C. கல்வி குழுமம், தருமபுரி, ஷோரூமை திறந்து வைத்தார்
மரு. ம. சாந்தி , இணை இயக்குனர், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் மங்கள ஒளி ஏற்றி வைத்தார்
ஸ்ரீ ரங்கா டிபார்ட்மென்ட் ஸ்டோர் உரிமையாளர் Ln. R. துரைராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்
செந்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் செந்தில் குழுமத்தின் தலைவர் செந்தில் C. கந்தசாமி மற்றும் செந்தில் கல்வி அறக்கட்டளையின் துணைத்தலைவர் K. மணிமேகலை முதல் விற்பனையை பெற்றுக்கொண்டனர்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் K.R. நாகராஜன் அன்புடன் வரவேற்றார்.
ராம்ராஜ் காட்டன் – தருமபுரி ஷோரூம் திறப்பு விழா

Leave a Reply