அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை அரசியலாக்க கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், ”
பிரதமர் பல வெளிநாடுகளுக்கு சென்று ஏற்படுத்திய நல்லுறவும் பாரத தேசம் தொழில் முனைவோர்களுக்கு ஏற்ற தேசமாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் தான் தொழில் முனைவோர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள். அதேபோல் இதற்கு முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது, அதில் எவ்வளவு தொழில் முனைவோர்கள் கிடைத்தார்கள், மக்களுக்கு எவ்வளவு பலன் தந்தது, எந்தெந்த நாடுகள் தொழிற்சாலையை ஆரம்பித்தார்கள் இதைப் பற்றிய விவரங்கள் முழுவதுமாக தெரியவில்லை. மாநாடு நடத்துவது பெரிதல்ல. அது எந்த அளவிற்கு அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். முதலீட்டாளர்கள் வரும்பொழுது அனைத்து பகுதிகளுக்கும் தென்பகுதிகள் உட்பட கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு முதலமைச்சரே சென்று பார்க்கவில்லை. ஆனால் குஜராத்தை பற்றி பேசுகிறார்கள். விளம்பர விழாக்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தான் கவலை. கலைஞர் 100 விழா நடந்திருக்கிறது.மேலும் 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை வந்திருக்கிறது. முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை செய்யாமல் எல்லாவற்றையும் நடக்க விட்டுவிட்டு மத்திய அரசு மீது பழி போட்டு விடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. அதை அவர்கள் மாற்ற வேண்டும். அவர்கள் ஒன்றிய அரசு என்ற சொல்கிறார்கள். நீங்கள் 20 ஆண்டுகாலம் மத்திய அரசில் இருந்த பொழுது ஒன்றிய அரசில் இருந்தீர்களா அல்லது மத்திய அரசில் இருந்தீர்களா? அப்பொழுது ஏன் ஒன்றிய அரசு என சொல்லவில்லை. கல்வியை மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பவர்கள் நீங்கள் இருக்கும் போது ஏன் செய்யவில்லை? இவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் மத்திய அரசின் மீது பழிபோட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
ராமர் கோவில் திறப்பு விழாவில் அனைவருக்கும் பங்கு உண்டு. அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதே வேளையில் யாரை அழைக்க வேண்டும் என்பது கமிட்டியைச் சார்ந்தது. அவர்கள் அனைவரையும் அழைப்பார்கள். இவரை அழைக்கவில்லை அவரை அழைக்கவில்லை என அரசியல் ஆக்க கூடாது. குடியரசுத் தலைவரை மரியாதைக்குரிய தலைவராக பார்த்து தான் மத்திய அரசை நடத்திக் கொண்டிருக்கும் கட்சி தேர்ந்தெடுத்தது. குடியரசுத் தலைவராக வரக்கூடாது என்று நினைத்தவர்கள் தற்போது குற்றம் சாட்சி வருகிறார்கள்.குடியரசுத் தலைவராக வரக்கூடாது என்று நினைத்தவர்கள் குடியரசு தலைவரை வைத்து அரசியல் செய்கிறார்கள். மரியாதைக்குரிய குடியரசுத் தலைவருக்கு என்னென்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதனை நாடு கொடுத்துக் கொண்டிருக்கிறது:” என்று பேசினார்
Leave a Reply