,

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பொது விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் கோரிக்கை

ram temple Ayodhya
Spread the love

ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்திந் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் ராமர் சிலை, மற்றும் பதாகைகளை எடுத்து வந்து இது குறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்ப வந்திருந்தனர்.
இது குறித்து லோட்டஸ் மணிகண்டன் கூறுகையில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண்பதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து இந்து மக்களும் தயாராகி வருவதாகவும், பல்வேறு மக்களும் நேரில் செல்வதற்கு தயாராகி வருவதாகவும், அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்த தயாராகி வருவதாகவும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நேரலையை காண்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருவதால் தமிழக அரசு அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் மெக்கா, ஜெருசலேம் போன்ற தளங்களுக்கு செல்வதற்கு சலுகைகள் அளிக்கப்படுவது போல் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதற்கும் மாநில அரசு சார்பில் சலுகைகள் அறிவிக்க என கோரிக்கை விடுத்தார்.