இந்தியாவில் முதலாம் பானிப்பட்டு போர் முடிந்த தருணம். 1526-ம் ஆண்டு முகலாய மன்னன் பாபர் இந்தியாவிற்கு வந்து, அப்போது நடந்த போரில் வெற்றி பெற்றான்.
பின் இரண்டு ஆண்டுகள் கழித்து 1528-ல் “சரயு” நதிக்கரையில் உலாவிய பாபர், அங்கு குழந்தை வடிவாக வீற்றிருந்த ராமனின் திருக்கோயிலின் பிரமிப்பைக் கண்டு வியந்தான். ராம பிரானின் பிரம்மாண்ட கோவிலை கண்ட மன்னனுக்கு, மனதினில் கோயிலை அகற்றி விட்டு மசூதி எழுப்ப வேண்டும் என திட்டமிட்டான் .
இதனை தனது தளபதியான மீர் பாக்கியிடம் கூறிய முகலாய மன்னன் பாபர், அயோத்தியின் ராம்கோட்டில் உள்ள ‘ராமர் பிறந்த இடத்தில்’ குழந்தை ராமர் கோவிலைத் தகர்த்து விட்டு ஒரு மசூதியைக் கட்டி தொடங்கினான், தளபதி மீர்.
ராமர் கோயில் இடிக்கும் பாபரின் நடவடிக்கைகள், இந்துக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தி போராட்ட களம் காண தயாராயினர். ரஞ்சித் ராணா என்பவர் தலைமையில் பாபருக்கு எதிரான பெரும் போராட்டம் அப்பகுதியில் வெடித்தது.
இந்த போராட்டம் தான் ராம பிரான் திருக்கோயிலை மீட்டெடுத்த போராட்டத்திற்கு முதன் முறையாக அடிகோலியது. தொடர்ந்து மத்திய பிரதேச பகுதியிலிருந்து அகல்யா பாய் என்பவரும்,பெரும் படையினை திரட்டி வந்து, பாபர் படைக்கு எதிராக போராடினார்.
ராணி ஜெயராஜ் கன்வார் 5 ஆயிரம் பெண்களை திரட்டி வந்து அவதார புருஷனின் ஆலயத்தைக் காக்க போராட்டத்தினை முன்னெடுத்தார். 1528-ம் ஆண்டு முதலே தொடர்ந்து கோவில் தகர்ப்புக்கு எதிராக போராட்டம்…! கலவரம் ; சண்டை … போராட்டம்…!
இந்துக்களின் தன்னெழுச்சியான தொடர்ந்த போராட்டத்தால், மசூதியின் கோபுர அமைப்பான மினார் கட்ட முடியவில்லை அங்கு முகமதியரால் தொழுகையும் நடத்த முடியவில்லை.
இந்த போராட்டக் கலவரங்களுக்கு இடையே, சியாமானந்த மகராஜ் என்பவர் கோவில் கருவறையில் இருந்த குழந்தை ராமர் சிலையை பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் மத வன்முறை முதன்முறையாக 1853 -ல் நிகழ்ந்தது. அவாதின் நவாப் வாஜித் ஷாவின் ஆட்சியின் கீழ், நிர்மோஹிஸ் என்ற இந்து பிரிவினர், பாபரின் காலத்தில் ஒரு இந்து கோவில் இடிக்கப்பட்டது என்று வலியுறுத்தியது.
தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சியில், அயோத்தியில் வாழ்ந்த செல்வாக்கு மிக்க இஸ்லாமியரான அமீர் அலிக்கும் – போராட்டத்தை முன் நின்று நடத்தியவரான பாபு ராம் சரண் தாஸுக்கும் இடையில் 1858-ல் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் ராமர் கோவிலை இடித்தது பாபர் என்பதை ஒப்புக் கொண்ட அமீர் அலி, மீண்டும் ராமர் கோயிலை எழுப்புவதற்கு வழி வகை செய்திருந்தது.
இதனை கேள்விப்பட்ட ஆங்கிலேயர், தலையிட்டு எங்கள் ஆட்சியில் ஒப்பந்தம் போடுவதற்கு நீங்கள் யார் என தலையிட்டு அவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் இருவர் மீதும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதுவும் அங்குள்ள புளிய மரத்தில் இருவரையும் தூக்கிலிட்டனர்.
இவர்கள் இருவரையும் தூக்கிலிட்ட அந்த புளிய மரத்தினை பொதுமக்கள், வழிபட தொடங்கினர்.
அதே இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்ப சால்வா என்பவர் முயற்சித்த போது அவரையும், வழக்கு போட்டு அதே மரத்தில் தூக்கிலிட்டனர்.
அனைவரும் வழிபடுகிறார்கள் என்று எண்ணிய ஆங்கிலேயர் அந்த புளிய மரத்தினை வெட்டி வீழ்த்தினார் .
ஆங்கிலேயர்கள் பிரச்சனைக்குரிய இடத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க ஒரு வேலியை நிறுவினர். இஸ்லாமியர்களுக்கு மசூதிக்குள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது, நீதிமன்றம் இந்துக்களின் பயன்பாட்டிற்காக நியமிக்கப்பட்டது. – ஜனவரி 1885 -ம் ஆண்டு, மஹந்த் ரகுபீர் தாஸ், மசூதிக்கு வெளியே அமைந்துள்ள ராம்சபுத்ராவின் மீது ஒரு விதானம் அமைக்க ஒப்புதல் கோரி, பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
1949 – ம் ஆண்டு பாபர் மசூதிக்குள் உள்ள ராமர் சிலையினை. வழிபட ,கோபால் சிங் விஷாரத் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அயோத்தியைச் சேர்ந்த ஹஷிம் அன்சாரி என்பவர், சிலைகளை அகற்றி, மசூதியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகினார். அரசாங்கம் அந்த இடத்தினை பூட்டியது, ஆனால் பூசாரிகள் தினசரி பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
1961 – ம் ஆண்டு ஒரு மனுதாரர் சொத்துக்களை இஸ்லாமியகளுக்கு மீட்டுத் தருமாறு ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். மேலும் பாபர் மசூதியை வாரியத்தின் சொத்தாக அறிவிக்கக் கோரி சன்னி மத்திய வக்ஃப் வாரியம் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ராம பிரானுக்கு திருக்கோயில் கட்டுவதற்கான மாபெரும் மக்கள் இயக்க தொடங்கப்பட்டது.
1980 – ம் ஆண்டுகளில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைமையில் ஒரு குழு, ராமர் பிறந்த இடத்தை விடுதலை செய்யும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.
1986 -ம் ஆண்டு வழக்கு தொடுத்த ஹரி ஷங்கர் துபேயின் வேண்டுகோளின் பேரில், அயோத்தியில் உள்ள மாவட்ட நீதிபதி, மசூதியின் கதவுகளைத் திறந்து, அங்கு இந்துக்கள் வழிபடுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு பதிலடியாக இஸ்லாமியர்கள் பாபர் மசூதி நடவடிக்கை குழுவை அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பாபர் மசூதியின் கதவுகளைத் திறக்க உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன், ஒரு இந்து பூசாரிக்கு மட்டுமே வருடாந்திர பூஜை நடத்த அதிகாரம் இருந்தது. தீர்ப்பைத் தொடர்ந்து, அனைத்து இந்துக்களுக்கும் அந்த இடத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டது., என்றாலும் மசூதிக்குள் சென்று,வழிபடுவது இந்து சமுதாயத்தினாலே பெரும் நெருடலாக இருந்தது.
1989-ம் ஆண்டு விஎச்பி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது. பாபர் மசூதியை ஒட்டிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட விஎச்பி தொடங்கியது. விஎச்பியின் முன்னாள் துணைத் தலைவர் நீதிபதி தியோகி நந்தன் அகர்வால், மசூதியை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து, பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டன
ரத யாத்திரை
1990 – ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியின் தலைமையில், குஜராத்தில் சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரை தேசிய ரத யாத்திரையை பாஜக ஏற்பாடு செய்தது.
ராமர் கோயில் கட்டுவதற்கான இந்த ரத யாத்திரை பெரும் எழுச்சியினையும் ,விழிப்புணர்வையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியது. அப்போது விஎச்பி தலைமையில் நடைபெற்ற ராமர் கோயில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதே இந்தப் பேரணியின் முதன்மை நோக்கமாக இருந்தது.
இந்த ஊர்வலத்தில் இந்து அமைப்புக்களுடன் இணைந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருந்தனர்.
1990-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல்
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் தொடங்கிய யாத்திரை, பல கிராமங்கள், மற்றும் நகரங்களைக் கடந்து சென்றது. ஒவ்வொரு நாளும் 300 கிலோமீட்டர் தூரத்தை கடந்து, யாத்திரையை வழிநடத்தும் எல்.கே. அத்வானி, ஒரே நாளில் ஆறு பொதுக்கூட்டங்களில் அடிக்கடி உரையாற்றினார்.
அக்டோபர் 23,ல் எல்.கே.அத்வானியை கைது செய்ய பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவுக்கு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் உத்தரவிட்டார். அவரது ஊர்வலம் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் இடையே எல்லையைத் தாண்டியதால் பாஜக தலைவர் அத்வானி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
1992 – ம் ஆண்டு டிசம்பர் 6,ல் சிவசேனா, விஎச்பி மற்றும் பாஜக தலைவர்கள் முன்னிலையில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதனால் பலர் கைது செய்யப்பட்டனர்.
2003 இல், இந்திய தொல்லியல் துறை சர்ச்சைக்குரிய இடத்தை ஆய்வு செய்தது.
மசூதிக்கு அடியில் சிறிய ராமர் சிலைகள், சீதா சிலை,கோவிலின் தூண்கள், பூஜை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஆதாரங்களை அறிக்கை செய்தது. இருப்பினும், முஸ்லீம் அமைப்புகள் இந்த கண்டு பிடிப்புகளை மறுத்தன, வரலாற்று விளக்கம் தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது.
2010-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தகராறு குறித்த நான்கு தலைப்பு வழக்குகள் மீது 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது: மூன்றில் ஒரு பங்கு இந்து மகாசபை பிரதிநிதித்துவப்படுத்தும் ராம் லல்லாவுக்கு ஒதுக்கப்பட்டது; இஸ்லாமிய வக்ஃப் வாரியத்திற்கு மூன்றில் ஒரு பங்கு; மீதமுள்ள மூன்றாவது நிர்மோஹி அகாராவுக்கு. இதையடுத்து, டிசம்பரில், அகில பாரதிய இந்து மகாசபா மற்றும் சன்னி வக்பு வாரியம் ஆகிய இரண்டும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகின.
மூன்று தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர் – 2011 – நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் மற்றும் சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். – சர்ச்சைக்குரிய இடத்தை 3 பகுதிகளாகப் பிரிக்கும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
நவம்பர் 9, 2019 அன்று, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது, சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை, ராம ஜென்மபூமி கோயில் கட்டுவதற்காக, இந்திய அரசால் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு மாற்ற உத்தரவிட்டது.
மேலும், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்திற்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை வேறு இடத்தில் ஒதுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. – இந்த உத்தரவை பிறப்பித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலானது. நவம்பர் 17 அன்று தீர்ப்பை வழங்கிய 8 நாட்களில் அவர் ஓய்வு பெற்றார்
2019-ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒப்படைக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு – ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்று பெயரிடப்பட்டது. இந்த அறக்கட்டளை 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று, பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார். நினைவுப் பலகையை திறந்து வைத்த பிரதமர், நினைவு தபால் தலையையும் வெளியிட்டார்.
தற்போது 161 அடி கோபுரம் கொண்ட குழந்தை ராமரின் ஆலயம் பிரம்மாண்டமான முறையில் எழுப்பப்பட்டுள்ளது. உலகில் உள்ள இந்து ஆலயங்களில் இது மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஜனவரி 22 ஆம் தேதி பகல் 12.20 மணிக்கு ராமர் சிலை கருவறையில் திறந்து வைக்கப்பட உள்ளது.உலகம் போற்றும் உன்னத விழாவாக இது நடைபெற உள்ளது.
இதற்காக இந்து அமைப்புக்களால் நாடு முழுவதும் அயோத்தியில் பூஜை செய்யப்பட்ட அரிசி, ராமர் ஆலய படம், அழைப்பிதழ் அனைத்து வீடுகளுக்கும் அளிக்கப்பட்டு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
பிரதிஷ்டை விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார். அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் , ராஷ்டிரிய ஸ்வயம் சேவாக் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், இந்து மத தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்
கின்றனர். இவ்விழாவில் பங்கேற்க ஆதீனங்கள், மடாதிபதிகள், திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழி
லதிபர்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலகமே எதிர்பார்க்கும் நடையில் நின்றுயர் நாயகனாம் ராம பிரானின் பிரதிஷ்டை நாளில் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வோம்.

Leave a Reply