ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை

Spread the love

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை ராமலிங்க காலனியில் உள்ள அருள் விநாயகர் கோவிலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் P.S.சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் வக்கீல் செந்தில்குமார், குணசேகரன், காமராஜ், R.K.ரவி, அரிமா கருப்புசாமி, தனசேகரன், பறக்கும் படை ராஜ்குமார், சந்தோஷ் ரபீக், சிவ ஐயப்பன், பாலசந்தர், பாலாஜி, காமராஜ்துல்லா,கிருஷ்ணசாமி. சிவாஜி லோகு. ராஜேஸ், தாமஸ்.விஜூ, பகத். ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு பூஜையை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.