, , ,

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்…….

savukku sangar
Spread the love

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழாங்கி உள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் பெண் காவலர்களை சம்பந்தபடுத்தி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் கோவை ‘சைபர் கிரைம்’காவல்துரையினர் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.