யுனைடெட் முதியோர் இல்லத்தில் முப்பெரும் விழா கொண்டாட்டங்கள்

Spread the love

கோவை சத்தி மெயின் ரோட்டில் குரும்ப பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் முதியோர் ஆதரவற்றோர் இல்லம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதியோர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முற் றிலும் இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த இல்லத்தில் சமீபத்தில் முப்பெரும் விழா – உலக முதியோர் தினம், காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினம் – சிறப்பாக கொண்டா டப்பட்டது.
விழாவில் இல்ல நிர்வாகி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். விஞ்ஞானி எம். முரளிதரன் தலைமை தாங்கினார். உயர்நீதி மன்ற வழக்கறிஞர் கே. ராமதுரை சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு முன் தாத்தா-பாட்டிகள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை ஆற்றினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முதியோர்கள் அனைவருக்கும் பொன்னாடை போற்றி கௌரவிக ்கப்பட்டது.
விழாவில் கே. முருகேசன், எம். ஸ்ரீதர், ஆர். சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக ஆர். பஞ்சவர்ணம் நன்றியுரை வழங்கினார்.