கோவை மாநகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கோவை எம்.பி கணபதி ராஜ்குமார் சூயஸ் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடத்தில் அவர் கூறுகையில், கோவையில் மக்கள் சிரமப்பட சாலைகளை முறையாக மூடாத சூயஸ் நிறுவனமே காரணம். தோண்டி போடுறாங்க மூடுவதில்லை . கவுன்சிலர், மண்டல தலைவர், மேயர் என யார் சொன்னாலும் கேட்பதில்லை. இதனால், நானே பல ஆலுவல்களை விட்டு விட்டு மாமன்ற கூட்டத்தில் பேச வேண்டியது உள்ளது.
அதிகாரிகள் முறையாக அளவீடு செய்வதில்லை.கார் ஷெட்களை கூட அளந்து வரி போடுகிறார்கள். இதுவெல்லாம் தவறு. எல்லாவற்றுக்கும் மேலாக பில் கலெக்டர்கள் மக்களை மிரட்டும் வகையில் நடக்கிறார்கள். பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானால் உடனடியாக மாற்றப்படுவார்கள். சாலையோர உணவங்கள் பெருகிக் கொண்டிருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்துவதில்லை. இதனால், மக்கள் நடக்க கூட சிரமப்படுகிறார்கள். சூயஸ் நிறுவன பிரச்னைக்கும் பாதாள சாக்கடை பிரச்னைக்கு விரைவில் முடிவு எட்டப்படும். என்.ஜி.ஓ என்கிற பெயரில் சிலர் தவறு செய்கிறார்கள். அதுவும், களையப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply