மொபைல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னோடியும், இந்தியாவின் முன்னணி AI ஸ்மார்ட்போன் பிராண்டுமான மோட்டோரோலா, வெறும் ரூ.12,999க்கு தங்களின் மிகச்சிறந்த பட்ஜெட் ஃபோனான^ இந்த moto g57 POWER-ஐ அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்தது.
இச்சாதனம், மிகச்சிறந்த செயல்திறன் மற்றும் பல்பணிக்காக உலகின் சக்திவாய்ந்த 1வது ஸ்னாப்டிராகன்® 6s ஜென் 4 பிராசஸர், உச்சபட்ச போட்டோகிராபி அனுபவத்திற்காக இப்பிரிவின் மிகச்சிறந்த 50MP சோனி LYTIA™ 600 கேமரா, ஒரு மெலிதான வடிவமைப்பிற்காக இப்பிரிவின் மிக சக்திவாய்ந்த ஒரு 7000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி ஆகியவற்றுடன் இந்த பட்ஜெட் வகையை மறுவரையறை செய்கிறது. மேலும், கார்னிங்® கொரில்லா® கிளாஸ் 7i மற்றும் MIL-810H உடன் கூடிய இப்பிரிவின் மிக உயர்ந்த நீடித்துழைக்கும் தன்மை, மற்றும் மூழ்கடிக்கும் 6.72” 120Hz FHD+ டிஸ்ப்ளே ஆகிய இவையனைத்தும் ஒரு அல்ட்ரா-பிரீமியம் பான்டோன்™ க்யூரேட்டேடு வேகன் லெதர் டிசைனில் பொதிந்துள்ளது.
அதிநவீன மற்றும் உலகின் 1வது ஸ்னாப்டிராகன்® 6s ஜென் 4 பிராசஸர் (4nm)-ஆல் இயக்கப்படும் moto g57 POWER, உலகளவில் இந்த பிராசஸரைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்பதால், இது பெஸ்ட்-இன்-கிளாஸ் செயல்திறன் மற்றும் அபாரமான வேகத்தை வழங்குகிறது. இது அதி மென்மையான பல்பணி மற்றும் லேக்-ஃப்ரீ கேமிங்கை உறுதி செய்கிறது. உள்ளமைக்கப்பட்ட 8GB RAM-உடன், RAM Boost 4.0-ஐக் கொண்டு 16GB வரை விரிவாக்கவல்லதுடன், மொத்தம் 24GB மற்றும் 128GB UFS 2.2 ஸ்டோரேஜுடன், ஒவ்வொரு செயலியும் உடனடியாகத் தொடங்கப்பட்டு இலகுவாக இயங்கும். 11 5G பேண்ட்கள் மற்றும் Wi-Fi 6-க்கான ஆதரவுடன், moto g57 POWER அதிவேக, நம்பகமான இணைப்பை வழங்குவதன் மூலம், இன்றைய ஹைப்பர்-கனெக்டேடு உலகில், பயனர்களை முன்னணியில் வைத்திருக்கிறது.



Leave a Reply