மோடி பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி லேப்டாப் வழங்கினர் தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Spread the love

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு கோவை போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பிருந்தாவன் பப்ளிக் பள்ளி அருகே நம்ம மோடி நாம கொண்டாடுவோம் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பிருந்தாவன் பள்ளி அறக்கட்டளை தலைவர் கே. வசந்தராஜன் செய்திருந்தார். பிரபல பாடகர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற் றவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் ஏழை மாணவர்களுக்கு லேப்டாப்பினை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் வழங்கினர்.


அதிமுக முன் னாள் அமைச்சர் தாமோதரன், பிரிந்தாவன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள் கே. வசந்தராஜன் மற்றும் கணகாசலம், மதுக்கரை அதிமுக செயலாளர் சண்முகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், கோபால்சாமி, தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். சந்திரசேகர், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.