கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற, மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் கலந்து கொண்டு, மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி.முருகன், தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல்,கழக அமைப்பு சாரா அணி துணைச் செயலாளர் விஷ்ணு பிரபு,தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.நா.உதயகுமார், மு.மா.ச.முருகன், ஆர்.மணிகண்டன், ச.குப்புசாமி, பகுதிக்கழக செயலாளர்கள் மார்க்கெட் எம்.மனோகரன்,மா.நாகராஜ், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மொழிப்போர் தியாகிகள் திருவுருவப் படத்திற்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்

Leave a Reply