தமிழக சட்டசபையில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் பேசியதாவது, கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோவை – சத்தி சாலை,துடியலூர் பிரிவு, சரவணம்பட்டியில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏராளமான ஐ.டிநிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் ஏராளமாக செயல்பட்டு வரு
கின்றன. ஆனால், இந்த டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கப்படாததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதியில் உடனடியாக உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்.
எம்.எல்.ஏ அருண்குமாரின் கேள்விக்கு பதிலளித்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சரவணம்பட்டியில் உயர் மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் வருவதால் தாமதமானது. தொடர்ந்து, வியாபாரிகள் பொதுமக்களிடத்தில் கருத்து கேட்கப்பட்டது. பின்னர், கலெக்டர் மேம்பாலம் அமைக்க பரிந்துரைத்தார். இதையடுத்து மீண்டும் மேம்பாலம் கட்ட கலெக்டர் மேம்பாலம் கட்ட பரிந்துரைத்தார். விரைவில் டெண்டர் விடப்பட்டு, மேம்பாலம் கட்டப்படும் என்று பதில் அளித்தார்.
மேம்பாலங்கள் பிரச்னை பி.ஆர்.ஜி.அருண்குமார் முயற்சிக்கு தீர்வு கிடைக்குமா?

Leave a Reply