கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், பி. ஆர்.ஜி அருண்குமார், நகர செயலாளர் வான்மதி சேட்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சீலர் பி.டீ.கந்தசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் சலீம்,தனசேகர், அம்மா பேரவை பகுதி செயலாளர் குறிஞ்சி மலர் ஆர்.பழனிச்சாமி மற்றும் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினார் பி ஆர் ஜி அருண்குமார் பேசுவையில், ஆளும் திமுக அனைத்திலும் ஊழல்களை செய்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்திற்கும், திமுக ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணி பாருங்கள். குடிநீர் பிரச்சனையிலிருந்து பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை எதையுமே தீர்க்காத அரசாக திமுக அரசு இருக்கிறது. பட்டியிலின மாணவி கொடுமை படுத்தப்பட்டபோது திமுக அரசு நடவடிக்கை எடுத்ததா? எடப்பாடியார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிக்கை விட்ட பிறகு பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கிறது. மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே களத்தில் இறங்கி போராடும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே.
மக்களுக்காக போராடும் அதிமுகவினரை கண்டாலே திமுக நடுங்குகிறது. பொய் வழக்கு போடுகிறது. திமுகவிற்கு பயந்து நாட்டை விட்டா போக முடியும். தொடர்ந்து மக்களுக்காக போராடுவோம். மேட்டுப்பாளையம் நகராட்சியில் மக்கள் பிரச்சனைக்காக ஆணையாளரை சந்தித்த எங்கள் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ் மீது பொய் வழக்கு போடுகிறார்கள் என்றால் எப்பேர்பட்ட கொடுங்கோலாட்சி நடக்கிறது என்பதை எண்ணிப்பார்கள். எவ்வளவு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் சரியான பதில் இல்லாத காரணத்தால் முறைப்படி அவரை சந்திக்க நேரில் சென்றார். அவர் மீதும், உடன் சென்ற நிர்வாகிகளின் மீதும் வழக்கு பதிவு செய்கிறார்கள். இதற்கெல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள்.
எங்களுக்கு சட்டம் தெரியும். சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்போம். நீங்கள் காட்டும் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அதிமுக பயப்படாது. திமுகவின் பொய் வழக்குகளுக்கெல்லாம் அதிமுக அஞ்சாது.
மக்களுக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்படுவோம். மக்களுக்கு எந்த திட்டங்களையும் தராத திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவோம். நாங்கள் தெய்வமாக வணங்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதாவை பற்றி தவறாக பேசினால் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். எங்கள் தலைவரைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு தகுந்த பாடத்தை மக்கள் தருவார்கள்” என்றார்.
மேட்டுப்பாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Leave a Reply