, , ,

மேடையில் மத்திய நிதியமைச்சரை விமர்சித்து  நயினாரை சிக்க வைத்த ஸ்டாலின்; காட்டமாக பாய்ந்த கராத்தே தியாகராஜன்

nainar nagendran
Spread the love

சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லைக்கு விசிட் அடித்தார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனை வைத்து கொண்டே மேடையில் ஸ்டாலின் பேசியதாவது, ‘ 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எப்படிப்பட்ட பெருமழை பெய்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.  மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை. மாநில அரசு தங்களிடம் இருந்த நிதியை கொண்டுதான் மக்களுக்கு உதவியது. இதை சொல்வதற்காக  நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்து கொள்ள கூடாது. இந்த விஷயம் பாஜகவின் சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் தெரியும். நயினார் நாகேந்திரன்தான் என்னிடம் நீங்கள் இதுகுறித்து பேசுங்கள் என்று சொன்னார் ‘ என்று நகைச்சுவையாக சொன்னார். அப்போது, மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன்,  ஐயையோ அப்படியெல்லாம் இல்லை என்பது போல உடனடியாக தலையை அசைத்து மறுப்பு தெரிவித்தார். நயினார் நாகேந்திரனை மேடையில் வைத்து கொண்டே பாரதிய ஜனதா கட்சியை முதல்வர் விமர்சித்ததும், அதற்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் மேடையில் நயினார் அமர்ந்திருந்ததும் அந்த கட்சிக்குள் சல சலப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன்  நயினார் நாகேந்திரனை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கராத்தே தியாகராஜன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘பிரதமர் மோடி,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய அரசின் திட்டங்களையும் முதல்வர் விமர்சித்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் அதை பார்த்து கொண்டிருந்துள்ளார்.  மேடையில் இருந்து வெளியேறியிருக்க வேண்டும். அல்லது செய்தியாளர்களை சந்தித்து முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், நயினார் நாகேந்திரன் அமைதியாக இருந்தது ஏன்? நயினார் நாகேந்திரனின் இந்தசெயல்பாடு குறித்து  வட சென்னையில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசினேன். அவர் ஒரு  மாநில அமைச்சராக இருந்தவர். அதிமுக முன்னாள் தலைவர் ஜெயலலிதா அனுமதி இல்லாமல் அவரால் எங்காவது  செல்ல முடியுமா? பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்த போது, அவர் ஏன் எதிர்வினையாற்றாதது ஏன்? என்பதுதான் என் கேள்வி.

இவ்வாறு கராத்தே தியாகராஜன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்துள்ளதையே இந்த மோதல் காட்டியுள்ளது.