மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது – ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ

Spread the love

கோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் தொகையை காரணம் காட்டி மத்திய அரசு ரத்து செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டித்தார்.

காந்திபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி–கல்லூரி மாணவர்களை மது மற்றும் போதைப் பொருள்களில் இருந்து பாதுகாக்க “சமத்துவ நடைபயணம்” ஜனவரி 2-ம் தேதி திருச்சியில் தொடங்கும் என்றார். இந்த நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்; இது மதுரையில் நிறைவடையும். நிறைவு விழாவில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்தது கோவைக்கும் மதுரைக்கும் பெரிய நஷ்டம் எனவும், மக்கள் தொகை கணக்கை அடிப்படையாகக் காட்டுவது நியாயமற்றது எனவும் வைகோ கண்டனம் தெரிவித்தார்.