மூன்று லயன்ஸ் சங்கங்களில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

Spread the love

2025–2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கே.ஆர்.புரம் லயன்ஸ் சங்கம், பீளமேடு கிங்ஸ் லயன்ஸ் சங்கம் மற்றும் கன்சல்டன்சி லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று லயன்ஸ் சங்கங்களின் சார்பில் கோயம்புத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் புதிய தலைவர்களாக புஷ்பராஜ், சுந்தர்ராஜன், மனோகரன் ஆகியோர் பதவி ஏற்றனர். செயலாளர்களாக செல்வநாயகம், கதிரவன், முத்துராஜ், ராம்குமார், லட்சுமணகுமார் மற்றும் பொருளாளர்களாக சந்திரன், ஜனார்த்தன ரெட்டி, பாலமுருகன் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

புதிய நிர்வாகிகளை இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநரான டாக்டர் பழனிச்சாமி அவர்கள் பதவியில் அமர்த்தினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் சாரதா மணி பழனிச்சாமி அவர்கள் புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்.

விழாவில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் – மாவட்டம் 3242 சி.ஜி.எஸ் VDT ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார், முதலாம் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர், வட்டாரத் தலைவர் சித்ரா நந்தகுமார் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் நித்யானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவின் போது லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதோடு, பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பையும் மாவட்ட அமைச்சரவை பொருளாளர் நல்லபாண்டி அவர்கள் சிறப்பாக மேற்கொண்டார். லயன்ஸ் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.