முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும் அதிமுகவில் இணைந்த கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியிலும், அரசியலிலும் சிறந்து விளங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.
Leave a Reply