,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த  நாளில்  37 வது ஆண்டாக ரத்த தானம் செய்த முன்னாள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி
Spread the love

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  76 வது ஆண்டு பிறந்த நாளையொட்டி கோவை மாவட்டத்தில் ஜெயலலிதாவின் சாதனைகளை பறைசாற்றும் விதமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், இரத்த தானம் வழங்குதல் மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை சுகுணாபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி  ஏற்பாட்டின் பேரில் தொடர்ந்து 37 வது ஆண்டாக மாபெரும் இரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இந்த ரத்த தான முகாமுக்கு பகுதி செயலாளர் தி.மதனகோபால், பகுதி தலைவர் எஸ்.எம்.உசேன், வட்ட கழக செயலாளர்கள் ஏ.செல்லப்பன், எஸ்.சி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 37 வது ஆண்டாக தொடர்ந்து இரத்த தானம் செய்தார். மேலும் ஏராளமான நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
தொடர்ந்து சுகுணாபுரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளிக்கையில், “திமுக அரசு வெறும் விளம்பர அரசாகத்தான் இருக்கின்றது. அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையும் பெயரை மாற்றி மீண்டும் மீண்டும் புதிய திட்டங்களாக அறிவித்து விளம்பரம் தேடி வருகிறார்கள். இந்த பட்ஜெட் கூட திமுகவின் விளம்பர பட்ஜெட்தான். மேலும் நான்கரையாண்டு காலம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தினார் . மேலும் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அதிமுக மகத்தான வெற்றியை பெறும்.  மேலும் எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும்.” என்று பேசினார்.
இந்நிகழ்வில்  கேரளா மாநில எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் சுகுணாபுரம் சுகுமார், பகுதி துணை செயலாளர் அருணகிரிநாதன், பகுதி நிர்வாகிகள் கே.ஆர்.செல்வராஜ், கே.கே.சுரேஷ்பாபு,  சிந்து அகல்யா, செல்வி ஆனந்தன், வட்ட செயலாளர்கள் சித்திரை செல்வராஜ், ஏ.செல்லப்பன், கேபி.பாஸ்கரன், புல்கான், எம்.ஜெகதீசன், ஜூனியர் ராஜா, விவேகானந்தன், ஜாஸ் எஸ்.ஜெகதீஷ், மணல் நாராயணன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் கே.பி.துரைசாமி, கே.வி.ஆறுமுகம், முந்திரி கோபால், மாவட்ட சார்பணி நிர்வாகிகள் இ.கே.பழனிசாமி, வக்கீல் இ.ஆர்.சிவக்குமார், ஆர்.சசிக்குமார், வக்கீல் மாணிக்கராஜ், வக்கீல் இளங்கோ, இரா.மயில்சாமி, கேவி.முனுசாமி, கேகே.ராஜன், செல்லாபாய், கேசி.வேலுசாமி, செபி செபாஸ்டியன், எஸ்.வடிவேல், மாயா சதீஷ், சார்பு அணி பகுதி நிர்வாகிகள் கிளி (எ) ஷகிலா பேகம், கேகே.சண்முகவேல், சதீஷ்குமார், கௌதம் முனுசாமி, ஆர்.விஜயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.