, , , ,

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள் – அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

admk
Spread the love

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ச்சுணன் தலைமையில், அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் இருந்து சிங்காநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுச்சாமி மற்றும் சிடிசி ஜப்பார் உட்பட ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று அவினாசி சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மேலும் அதை தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.