மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளில் மத்திய, மாநில பேரிடர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலர் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு தேவையான அரிசி, பால், ரொட்டி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தனர். அப்போது சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி உடனிருந்தார்.
Leave a Reply