, , , , , , , ,

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க ரூ. 40 லட்சம்  வழங்கிய 87 வயது மூதாட்டி.

Spread the love
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க ரூ. 40 லட்சம்  வழங்கிய 87 வயது மூதாட்டி.

கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மையத்திற்கு கோவை நிர்மலா கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரூபாய் 40 லட்சம் நன்கொடை வழங்கினார்.

நன்கொடை வழங்கும் நிகழ்வு கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகு தண்டுவடம் மறுவாழ்வு மையத்தில் இன்று நடைபெற்றது இதில் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகர் இயக்குனர் ரமாராஜசேகர். மற்றும் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

முதுகு தண்டுவட துறையின் தலைவர் டாக்டர் ராஜசேகர் கூறியதாவது, “ஏழ்மை நிலையில் உள்ள முதுகு தண்டுவட முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கங்கா முதுகு தண்டுவட சிகிச்சை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறதுஇதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் சிகிச்சை அளிப்பதோடு அவர்களுக்கு பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது

மேலும் முதுகு தண்டுவட முறிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நவீன சிகிச்சையில் அளிக்க மருத்துவ கருவிகள் அளிப்பதற்காக ரூபாய் 40 லட்சம் நிர்மலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கமலா வழங்கி உள்ளார் அவருக்கு மருத்துவமனையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு அதிநவீன சிகிச்சை அளித்து அவர்கள் அவர்களது குடும்பம் மற்றும் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு பேரு உதவியாக இருக்கும்” என்று கூறினார்

பேராசிரியர் கமலாவின் சகோதரர் ரோட்டரி தலைவர் ராஜகோபால் கூறியதாவது, “எனது சகோதரி கடந்த ஓராண்டுக்கு  முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக குணமாகி வருகிறார்கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்தோம் அதற்கு எங்களுடைய உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு மருத்துவரை தொடர்பு கொண்டோம்

இதுபோல் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு நாங்கள் செய்த உதவி பேரு உதவியாக இருக்கும்” என்று கமலாவின் சகோதரர் ராஜகோபால் தெரிவித்தார்