, , , ,

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

Spread the love

கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.

இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெலியிட்டுள்ள பதிவில், இன்று அரசு விழாவிற்காக கோவை வருகை தந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர்களிடம் கோவை மாவட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகளின் மனுவை வழங்கினேன். இதில் ஒரு சில கோரிக்கைகளை பற்றி அறிவிப்புகளை இன்று முதல்வர் வெளியிட்டு  இருக்கிறார் அதற்காக கோவை தெற்கு தொகுதி மக்களுடைய சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.