வரும் 1-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்களுக்கும் டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியானது.
இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு வரும் 1-ம் தேதி பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், அவருக்கு பதிலாக டி.ஆர்.பாலு டெல்லி செல்கிறார் என தகவல் வெளியானது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்
Leave a Reply