பாஜக எம்.எல்.ஏ மற்றும் தேசிய மகளிரணி தலைவரான வானதி ஸ்ரீநிவாசன், தமிழக முதல்வர் எந்த ஆதாரமுமின்றி “பூச்சாண்டி காட்டுகிறார்” எனவும், அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் ஒரே அணியில் கட்சிகள் நிற்பது போன்ற “நாடகம்” நடத்துகிறார் எனவும் குற்றம் சாட்டினார்.
கோவையில் நிதி மேலாண்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மகளுக்கும் வங்கி கணக்கு துவக்கி, பெண்களை தன்னிறைவு அடையச் செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய இலட்சியமாக உள்ளது. இதற்காக ‘வளம்’ இயக்கம் மூலம் நிதி மேலாண்மை தொடர்பான பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் ஒரே மாதிரியான கருத்துகளுடன் கல்வி பயில இந்த கொள்கை உதவுமெனவும், மூன்று மொழிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்திலும் பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டுள்ளார் எனவும் கூறினார். வசதியான மக்களின் குழந்தைகள் இந்த வாய்ப்பைப் பெற்றுவரும் நிலையில், ஏழை மாணவர்களும் இதன் பயனை பெறவேண்டும் என்பது முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்தி திணிப்பு பற்றிய புகார் ஒரு “மாயை” மட்டுமே என்று அவர் உறுதியாக தெரிவித்தார். இதனை போலியான பிரச்சாரமாக சிலர் உருவாக்குகிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அதேசமயம், தொகுதி வரையரை என்ற பெயரில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துவதன் மூலம், முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்த முயல்கிறார் என அவர் விமர்சித்தார். இதனுடன், தவெக தலைவர் குறித்து “Bro” என குறிப்பிட்டு பேசியதற்கான கேள்விக்கு, “Why bro?” என பதிலளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
Leave a Reply