லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மீண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே தமிழக முதல்வராக தேர்வாக வாய்ப்பு அதிகம் என முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல்வர் வேட்பாளருக்கான பட்டியலில், தவெக தலைவர் விஜய் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதுடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூன்றாம் இடத்தில் உள்ளார். தொடர்ந்து சீமான் நான்காம் இடமும், அண்ணாமலை ஐந்தாம் இடமும் பெற்றுள்ளனர்.
தவெக அரசியல் களத்தில் நுழைவதால் எந்தக் கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற கேள்விக்கு, திமுகவுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அடுத்ததாக விசிக மற்றும் அதிமுக பாதிக்கப்படும் என்றும், நாம் தமிழர் கட்சிக்கு குறைந்தளவே தாக்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இளம் மற்றும் புதிய வாக்காளர்களை அதிகம் கவரும் தலைவர்களாக விஜய் முதலிடமும், அண்ணாமலை இரண்டாம் இடமும், உதயநிதி ஸ்டாலின் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில், நகரப் பகுதிகளில் 54.8% பேரிடமும், கிராமப் பகுதிகளில் 41.3% பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.



Leave a Reply