இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜேம்ஸ் பேசியபோது, ” மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பில் வருகின்ற 12.12.2023 அன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எட்டாம் கட்டம் இயக்கமாக தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி இயக்கம் நடத்த முடிவு செய்திருந்தோம். சென்னையில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் கடுமையாக இருந்து வருவதாலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்புகளை கண்டு கடும் அதிர்ச்சி அளித்துள்ளததால் எங்களுடைய எட்டாம் கட்ட இயக்கம் வருகின்ற 27.12.2023 ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளோம்.
தமிழ்நாட்டின் தலைநகர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளில் தொழில் முனைவோர் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்துள்ளார்கள். குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ 2,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம். மேலும் விச்சூர் தொழில் பேட்டையில் திருமுடிவாக்கம், குன்றத்தூர், திருமழிசை, பெருங்குடி, காக்கனூர் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளையும் பார்க்கும் போது தொழில்துறையினருக்கு சுமார் ரூ 3,000 கோடிக்கு மேல் இயந்திரங்கள் செயலிழந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்கள் செய்வது அறியாமல் முடங்கிப் போய் உள்ளனர். இவர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் உதவிட முன்வர வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கிறோம்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை உடனடியாக இணைக்க வேண்டும். அதன் அடிப்படையில் நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன் வர வேண்டும். மாநில அரசு அவர்களுக்கு நிவாரணம் கிடைத்திட ஆவண செய்திட வேண்டும் என்றும் வேண்டுகிறோம்.
பாதிக்கப்பட்ட தொழில் பேட்டைகளில் உடனடியாக தலைமை செயலாளர் அவர்களின் தலைமையில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் உள்ளடங்கிய குழு அமைத்து, முகாம் நடத்தி, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள தொழில் முனைவோர்கள் பாதிப்புகளையும் மதிப்பு செய்து உரிய நிவாரணம் வழங்கிடவும், இன்சூரன்ஸ் இல்லாத குறுந்தொழில் நடத்தியவர்களுக்கு பாதிப்புகளை கண்டறிந்து நஷ்ட ஈடு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள தொழில் பகுதிகளை கண்டறிந்து, அவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த குறைந்தபட்சம் 2 மாதங்களாவது அவகாசம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு தாய் உள்ளதோடு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ரத்து செய்து உத்தரவு வழங்கினால் தொழில் பாதித்த துறையினருக்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மழை வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களுக்கு தொழில் கடன், வீட்டுக் கடன் வாகன கடன் அனைத்தும் திரும்ப செலுத்த குறைந்தபட்சம் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கிட மத்திய அரசு வங்கிகளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் வழிகாட்ட வேண்டுகிறோம். எந்த ஒரு நிறுவனத்தையும் சர்பாஸ் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்வதுடன், ஆறு மாதங்களுக்கான வட்டி அபராத வட்டிகள் அனைத்தும் தள்ளுபடி செய்திட கோருகிறோம்.” என்று பேசினார்.
இந்தக் கூட்டத்தில் சென்னையில் இருந்து வருகை தந்த டான்சியாவின் துணைத் தலைவர் வாசுதேவன், சென்னை மாவட்ட தொழில் அமைப்பின் துணைத் தலைவர் மோகன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம், மதுரை கப்பலூர் தொழிற்பேட்டை தலைவர் ரகுராம்ராஜா, திண்டுக்கல் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது, நடராஜ், கோவிந்தராஜ், பாலச்சந்திரன், சுரேஷ் உள்ளிட்ட கோவை, திருப்பூர், திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Leave a Reply