கோவை சரவணம்பட்டி அருகே கடந்த ஆண்டு மின்சாரம் தாக்கிய சிறுவனை காப்பாற்ற முயன்று உயிரிழந்த எட்டு வயது சிறுமி வியோமா பிரியாவுக்கு இந்திய அரசின் உயரிய குழந்தைகள் விருதான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
சின்னவேடம்பட்டி–துடியலூர் சாலையிலுள்ள ராமன் விகார் குடியிருப்பு வளாகப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, 6 வயது சிறுவன் ஜியான்ஸ் ரெட்டிக்கு மின்சாரம் தாக்கியது. இதைக் கண்ட வியோமா பிரியா அவரை காப்பாற்ற ஓடியபோது, அவருக்கும் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த துணிச்சலான செயலைக் கௌரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் வியோமா பிரியாவுக்கான பால புரஸ்கார் விருதை அவரது தாயார் அர்ச்சனா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றார்.


Leave a Reply