கோவை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்காக 400க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களை தேவையான உபகரணங்கள் அத்தியாவசிய பொருள்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைத்தார். 10 பேருந்துகள் 5 லாரிகளில் மீட்பு பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் கோவை மாநகராட்சி பணியாளர்கள் சென்னை சென்று உள்ளனர். இந்நிகழ்வில் பணியாளர்களுடன் உரையாடிய மாநகராட்சி ஆணையாளர் பணிகளை பாதுகாப்புடனும் சிறந்த முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை செல்லும் கோவை மாநகராட்சி பணியாளர்கள்

#coimbatore news, #coimbatorecorporation, #corporationcommissioner, #mickjam, #sivagurunathan, #thekovaiherald
One response to “மிக்ஜாம் புயல் எதிரொலி – சென்னை செல்லும் கோவை மாநகராட்சி பணியாளர்கள்”
-
Good one
Leave a Reply