மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்தவதன் மூலம் விரைவாக, எளிதாக, எந்த செலவும் இல்லாமல், அரசு ஊழியர்களுக்கு எந்த பாரமும் இல்லாமல் , ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு இந்த பணம் போய் சேரும் என தெரிவித்துள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சர் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை பாஜக அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது பேசிய வானதி சீனிவாசன் கடந்த இரண்டு தினங்களாக காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றது, இந்த சோதனையில் இதுவரை நடந்த சோதனைகளை விட அதிகமான அளவில் 300 கோடிக்கு மேல் பணம் இருப்பது தெரியவந்துள்ளது பணம் எண்ணும் மெஷின்களே உடையும் நிலையில் பணம் இருக்கிறது எனவும் அவ்வளவு பணம் இருந்தவை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நாட்டில் லஞ்சம் இது போன்ற ஊழல் இவற்றையெல்லாம் களைவதற்காக அதனுடைய ஒரு பகுதியாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை இருப்பதாக அறிவித்து மோடி வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் எனவும் சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பான பதில் அளிக்க அவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது, இருந்தாலும் கூட இத்தனை பணம் ஒருவரின் கையிருப்பில் இருக்கிறது, தீரஜ் சாகு தேர்தலில் தோற்றாலும் கூட காங்கிரஸ் கட்சி அவரை ராஜி சபா எம்பியாக்கி உள்ளது எனவும் இந்த வருமான வரித்துறை சோதனையில் இவ்வளவு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதை பற்றி இன்டி கூட்டணியில் இருந்து யாரும் பேசவில்லை எனவும் எதற்காக இவ்வளவு பணம் அங்கு வைக்கப்பட்டிருந்தது என கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், இது போன்ற சோதனைகள் நடக்கும் போது இது அரசியல் ரீதியான பழிவாங்கல், வருமானவரித் துறையும் அமலாக்க துறையும் மத்திய அரசின் ஏவலாளிகளாக இருக்கிறார்கள் என குற்றச்சாட்டை வைக்கிறார்கள் எனவும் ஆனால் சாதாரணமாக கீழே வாங்கும் இடத்தில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை வந்துவிட்டது, டிஜிட்டல் பரிவர்த்தனை காண கட்டமைப்பு இந்திய நாட்டில் வலுவாக இருக்கும் காலகட்டத்தில் எத்தனை கோடி ரூபாய் பணமாக வைத்திருப்பதற்கான காரணம் கேள்வி எழுப்பினார்.
மேலும் இவ்வளவு கட்டுக்கட்டாக பணம் வைப்பதற்கு இந்தி கூட்டணியில் ஒரு தலைவர் கூட காரணம் கூறவில்லை என விமர்சித்த வானதி சீனிவாசன், நியாயமான வழியில் சட்டத்திற்கு உட்பட்ட வழியில் எவ்வளவு பணத்தை வேண்டுமான்றாலும் சம்பாதிக்கலாம், ஆனால் தங்கள் கையில் இருக்கக்கூடிய பணம், கட்டு கட்டாக இத்தனை கோடி ரூபாய்களை வைத்திருப்பதற்கான காரணம் என்ன ? எனவும் இதற்கு என்ன காரணம் மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை நடத்தக்கூடாது என கூறுகிறார்களா இதற்கான காரணத்தை யாரும் கூறுவதில்லை எனவும் மத்தியில் நேர்மையான வெளிப்படையான அரசாங்கத்தை கொடுத்துக் கொண்டிருக்கிற மோடிக்கு எதிராக ஒரு கூட்டணி அமைத்திருக்கிறோம் என்ற அனைத்து அரசியல் கட்சிகளும், இதுபோல பணத்தை வைத்துக் கொண்டு கூடியவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார். இது போன்ற சோதனைகள் நடக்கும் போது அதை திசை திருப்புவதற்கு எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்குவது என்பது கண்டிக்கத்தக்கது எனவும் இது போன்ற கூட்டணி மோடிக்கு மாற்றான அரசாங்கத்தை எவ்வாறு கொடுக்க முடியும், சோதனையில் பறிமுதல் செய்வதற்கு பதிலை தராமல் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற வேலையாக பாஜக பார்க்கிறது என தெரிவித்தார்.
சென்னையில் மிக்ஜாம் புயலுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு நடந்திருக்கிறது எனவும் மாநில அமைச்சர்கள் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள், ஒருபுறம் 98 சதவீத பணிகள் முடிந்து இருக்கிறது, நான்காயிரம் கோடிக்கு பணிகள் செய்துள்ளோம் என கூறியது அமைச்சர் தான் இன்றைக்கு ஏன் இவ்வாறு நிலைமை இருக்கிறது கேட்கும்போது இவ்வளவு சதவீதம் செய்துள்ளோம் என மாற்றி மாற்றி மக்களிடம் ஏமாற்று நாடகத்தை திமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது என விமர்சித்தார். ஏற்கனவே பாஜக சார்பில் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வேண்டும் என கேட்டு இருந்தோம், மிக்ஜாம் நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாநில அரசு அறிவித்திருந்தது, இந்தத் தொகையை ரேஷன் கடைகளில் ரொக்கமாக தரும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் வங்கியில் நேரடியாக பணத்தை செலுத்த வேண்டும் எனவும் இல்லாத ஏழை மக்களை திரும்பவும் தெருவில் நிறுத்தாமல், ரேஷன் கடைகளுக்கு திரும்பவும் அவர்களை அலைக்கழிக்காமல் டோக்கன் வழங்குகிறோம் என்ற பெயரில் இன்னும் கொடுமை படுத்தாமல் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்களின் நேரம் மிச்சப்படும், அரசாங்கம் கொடுப்பதற்காக செய்யும் செலவு மிச்சமாகும், எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை ரொக்கமாக தராமல் அதுவும் பெண்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், இதன் மூலம் விரைவாக, எளிதாக, எந்த செலவும் இல்லாமல், அரசு ஊழியர்களுக்கு எந்த பாரமும் இல்லாமல் , ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு இந்த பணம் போய் சேரும் எனவும் முதலமைச்சர் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மழை வெள்ளத்துக்குப் பிறகு மாநில அரசின் அதிகாரிகள் முன்கள பணியாளர்கள் கடுமையாக பணி செய்து இருக்கிறார்கள் எனவும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்த வானதி சீனிவாசன், மாநில அரசு ஒவ்வொரு முறையும் நேரத்துக்கு தகுந்த ஆட்போல் பேசுவதை விட்டுவிட்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு எப்போதும் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மழைநீர் பாதிப்புக்கு 5000 கோடி மாநில அரசு கேட்டிருக்கிறது, தேசிய அளவீட்டு குழு கணக்கு கொடுத்த பிறகு மத்திய அரசு அதைக் கொடுக்கும் எனவும் தேசிய பேரிடர் என்பதற்காக ஒரு வரையறை இருக்கிறது அவ்வாறு இருந்தால் நிச்சயம் தேசிய பேரிடராக அறிவிப்பார்கள் எனவும் தெரிவித்த வானதி சீனிவாசன், திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மழைநீர் வெள்ள வழிகாலுக்கு என்று தனியாக ஒரு குழு அமைத்திருந்தது அந்த குழு அமைத்ததற்கு பிறகும் கூட நிலைமை இவ்வாறு இருக்கிறது என்றால் மாநில அரசு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம் எனவும் இடைத்தளங்கள் இல்லாமல் ஆளும் கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் மக்களுக்கு நேரடியாக பணம் சென்று சேர வேண்டும் எனவும் தெரிவித்தார்
மேலும் மின் கட்டண உயர்வு அனைத்து தொழில்களையும் பாதித்திருக்கிறது என தெரிவித்த மாணவி சீனிவாசன் விரைவில் கோவை-பெங்களூர் இடையே வந்தே பாரத் வகையில் சேவை வர உள்ளது எனவும் தெரிவித்தார்
Leave a Reply