கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்த நபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு மனு அளிக்க வந்த கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்தரத்தை தடுத்து நிறுத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய நிலத்திற்கு பட்டா சிட்டா கேட்டு ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்ததாகவும், எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.தொடர்ந்து போலீசார் சண்முகசுந்தரத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply