பல்வேறு சமூக மாற்றத்தையும், சாதனைகளை நிகழ்த்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி அவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராக லதா அர்ஜுனன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் கடவுள் வாழ்த்து இசை ஆசிரியர் சாந்தினி குமார், ஐஸ்வர்யா குமார் ஆகியோர் வழங்கினார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி,கோவை மாவட்ட கிராமிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் நல சங்கத்தின் தலைவர் துரை,சினேகா ஜெயின் மற்றும் பேபி ரித்தி ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் மற்றும் மகளிரணி மாவட்ட தலைவர் எல்ஐசி சாந்தி ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்
.இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் எங்களது கௌரவ தலைவர் நீதியரசர் கற்பகவிநாயகம் வழிகாட்டுதல் படி பல்வேறு மக்கள் நல பணிகளை முன்னெடுத்து செய்து வருகின்றோம்
.பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் இன்று சாதனை படைத்து வருகின்றனர்.விரைவில் எங்கள் நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதல்வரை நேரில் சந்தித்து சர்வதேச மாற்றுத்திற தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்கள், அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகின்றோம். அதேபோல் இன்று பல்வேறு மாற்றத்தையும், சாதனைகளை நிகழ்த்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்
இந்த விழாவில் விழா சிறப்புரையை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணை தலைவர் வழக்கறிஞர் சுந்திரபாலன், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் வழங்கினார்கள். மேலும் இந்த நலத்திட்ட உதவிகளை 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் சேகர், நட்ராஜ், கணேசமூர்த்தி, ராமஜெயம், விஜயராவ், ஜான், கங்காதரன், கௌரி, சண்முகம், அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply