பத்தாம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் மகத்தான தீபாவளி திருவிழா கொண்டாட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் கொங்கு திருப்பதி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சும்மா 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்களது குடும்பங்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் தீபாவளி பரிசாக புத்தாடை இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு கௌரவ அழைப்பாளர்களாக ஓக்கலியர் மகாஜன சங்கத்தின் தொண்டாமுத்தூர் வட்டார தலைவர் வாழை பாபு, ஆர் ஆர் ஹவுசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குனர் கர்ண பூபதி, கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் பசுமைப் புரட்சி இயக்கம் அப்துல் கலாம் விஷன் பவுண்டேஷன் இயக்குனர் உதயகுமார் , தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் நலச்சங்கம் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜ், பாரதிய ஜனதா கட்சி பெரியநாயக்கன்பாளையம் நகர மண்டல தலைவர் மகேந்திர ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊன்றுகோல் அறக்கட்டளை தலைவர் ஜே கருணாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சமூக சேவகர் வாழைபாபு விரைவில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ஊன்றுகோல் அறக்கட்டளைக்கு ஐந்து செண்டில் இடம் தருவதாக உறுதியளித்தார். மேலும் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக புத்தாடை கொடுத்த ஏபிஜே அப்துல் கலாம் விஷன் 20 20 நிறுவனத் தலைவர் உதயகுமார் அவர்களுக்கு ஊன்றுகோல் கட்டளை நிறுவனத் தலைவர் கருணாகரன் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
Leave a Reply