தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட மாநிலக் கல்விக் கொள்கை குறித்து, முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.
அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்பது “முதல்வரின் நாடகம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு” என்று ஆரம்பித்த தனது குற்றச்சாட்டில், அண்ணாமலை கூறியதாவது:
“கடந்த நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின், இன்று மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.”
அவர் மேலும் தெரிவித்ததாவது:
-
தேசிய கல்விக் கொள்கையை (NEP) எதிர்த்து, 2022-ல் உருவாக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை குழு, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே அறிக்கை சமர்ப்பித்தது.
-
ஆனால், அந்த அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகள், தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவை.
-
திமுக அரசு, காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்களை NEP-யிலிருந்தே கற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறது.
அண்ணாமலை ஆவேசமாகச் சாடியவை:
-
கல்விக் கொள்கை வெளியீடு ஆகிவிட்டாலும், பல அரசுப் பள்ளிகள் மரத்தடியில் நடைபெறுகின்றன.
-
அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் கூட பள்ளி கட்டிட வசதி இல்லாத நிலை காணப்படுகிறது.
-
திமுக ஒப்பந்ததாரர்கள் கட்டிய பள்ளிகள் சில முதல்வர் திறந்து வைத்த சில நாட்களிலேயே இடிந்து விழுந்துள்ளன.
-
தனியார் பள்ளிகளில் பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகிற போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் இருமொழிக் கொள்கை வலியுறுத்தப்படுவதை சமத்துவம், சமூக நீதி என அரசு எவ்வாறு நியாயப்படுத்தும்?
“பணம் இருப்பவர்களுக்கு பல மொழிகள், ஏழைகளுக்கு மட்டும் இரண்டு மொழி! இதுவா சமூக நீதி?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவராக திகழும் அண்ணாமலை, திமுக அரசின் கல்விக் கொள்கையை முழுமையாக நிராகரித்து, தமிழக மக்களுக்கு அது ஒரு அரசியல் நாடகம் என்பதை வலியுறுத்த முயன்றுள்ளார்.



Leave a Reply