கோயம்புத்தூர் மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் இன்று மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. மாண்புமிகு மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் . மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப. முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் அ. சுல்தானா, . த. குமரேசன், மண்டல குழுத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பாக நகரத்தின் மேம்பாடு, பொது சேவைகள், சுகாதாரம், வரிவிதிப்பு, கல்வி, பூங்கா, நகரமைப்பு உள்ளிட்ட துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மக்களின் தேவைகளை நேரடியாக பிரதிபலிக்கும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டம், நகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய கட்டமாக அமைந்தது.
Leave a Reply