கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து பின்னர் நடிகராக வளர்ந்தவர். இவருக்கு ஸ்ருதி என்றவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனினும், கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர்களது விவாகரத்து குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிசில்டாவை திருமணம் செய்ததாகவும், அவர் தான் தனது கணவர் என ஜாய் கிறிசில்டா சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். மேலும், ரங்கராஜ் குங்குமம் வைக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதோடு, தற்போது தாம் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆண்டுக்குள் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதிர்ச்சியாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்த ஜாய் கிறிசில்டா,
“நானும் ரங்கராஜும் சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம். பின்னர் சென்னை எம்.ஆர்.சி நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், எங்கள் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. நான் எங்கள் திருமணம், கர்ப்பம் குறித்து வெளியே கூறிய பிறகு, ரங்கராஜ் என்னை சந்தித்து, கருவைக் கலைக்கச் சொல்லி அடித்து துன்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு அவர் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை. அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவே நான் இந்த மனுவை அளித்துள்ளேன்” என குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் வெளிவந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
Leave a Reply